search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு திமுக"

    அதிமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்று கடையநல்லூர் கூட்டத்தில் ஐ.பெரியசாமி பேசினார். #tngovt #iperiyasamy

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கமி‌ஷன், கலெக்‌ஷன், கரப்‌ஷன் ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நகர செயலாளர் சேகனா தலைமையில் நடைபெற்றது.

    இதில் அவைத்தலைவர் சங்கரன், பொருளாளர் மஸ்தான், அப்துல்வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சைபுன்னிசா வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தங்கவேலு ஆகியோர் பேசினர். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசிதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எமர்ஜென்சி காலத்தை போல் பொதுக்கூட்டத்தில் எந்த செய்திகளை, எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று கூறுகின்றனர். மிசா காலத்தில் கூட கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது.

    மாநிலத்தில் தற்போது ஊழல் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கூட்டங்களை நடத்த விடமால் தடுத்து விடலாம் என்று கருதினர். அதை தற்போது சட்டரீதியாக எதிர் கொண்டு ஊழலுக்கு எதிராக கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

    மதங்களை புண்படுத்துகின்ற வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தனர். மதம் மாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்தபோது தமிழகத்தில் இருந்த ஜெயலலிதா ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

    அதே போல தான் இன்றைக்கு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்த பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் தூக்கி ஏறியப்பட வேண்டுமென்றால் 2004-ம் ஆண்டை போல் பாராளுமன்ற தேர்தலை போல தி.மு.க.கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தர வேண்டும்.

    மேலும் குட்கா ஊழலில் சரியான விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடக்க கூடிய அரசு மெஜாரிட்டி இல்லாத அரசாக உள்ளது. அது விரைவில் முடிவுக்கு வரும். தற்போது மக்கள் விரோத ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் முத்துப்பாண்டி, செரீபு, சீனிவாசன், சேக்தாவூது, பேபி ரஜப்பாத்திமா நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tngovt #iperiyasamy

    ×